தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஓர் இடத்தை பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது நடித்து வரும் படத்தில் பெண்வேடமிட்டு நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தாங்கள் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்காக தங்களையே மாற்றிகொள்ளும் நடிகர்கள் என்றாலே நம் நினைவிற்கு வருபவர்கள் கமலும், விக்ரமும் தான்.
தங்களுடைய கதாப்பாத்திரங்களுக்காக மெனக்கெடும் நடிகர்களான இவர்களது வரிசையில் இணையவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கோலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை குறுகிய காலத்திலேயே பெற்றவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் வித்தியாசமான வேடத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் பெண் வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அட்லியின் உதவியாளரான பாக்யராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ‘அவ்வை சண்முகி’ போன்ற கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இந்த கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் போடுவதற்கு ஹாலிவுட்டில் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்களுக்கு மேக்கப் பணியை மேற்கொண்ட சீன் புட் குழுவை நியமித்துள்ளதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இப்படத்தின் இதர தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.