சிவனொளிபாதமலையில் கற்சரிவு – யாத்திரிகள் மூவர் வைத்தியசாலையில்…

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற யாத்திரிகள் மீது கற்கள் புரண்டதனால், மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் தங்கல்ல, கணேமுல்ல பகுதியை சேர்ந்த 25,26 மற்றும் 27 ஆகிய வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.