சிவனொளி பாதமலை அருகில் சுற்றுலா விடுதி அமைக்கவுள்ள இடம் இதுதான்.. (PHOTOS)

சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதி குறித்த சமூக வலையத்தளங்களில் பரவி வரும் செய்தியானது, இன்று அதிகளவு பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கூகுள் வரைபட உதவியுடன் தேடுகையில், குறித்த சுற்றுலா விடுதியானது சிவனொளி பாதமலை முற்றத்திலிருந்து 6 கிலோமீற்றருக்கு அப்பால், மர்ரே நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் தனியார் காணியொன்றில் நிர்மாணிக்க இருந்ததாக தெரியவருகின்றது.

மேலும், குறித்த இந்த சுற்றுலா விடுதி நீர் வீழ்ச்சி உருவாகும் இடத்துக்கு மேல் பகுதியில் அமையவுள்ளது. இதனை அமைப்பதனால், அங்குள்ள தாவரங்கள், மிருகங்களுக்கு பாதிப்பாக அமையும் என சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி பாதுகாப்பான மண் உள்ள வனப்பகுதி என கடந்த 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி அரச வர்த்தமானியில் பதிவாகியுள்ளது.

இதனால், இப்பிரதேசத்தில் இந்த சுற்றுலா விடுதியை அமைப்பதில் பல்வேறு சூழல் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என சுற்றுச் சூழல் ஆய்வாளர் ஜகத் குணவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

01

02