நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத முகழகை பெற இயலும். பேஸ் பேக்குகள் உங்கள் முகத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு நல்ல நிறழகையும் கொடுக்கிறது. அதிலும் தயிரும் வாழைப்பழ பேஸ் பேக் உங்களுக்கு உடனடியான சிவப்பழகையும் பளிச்சென்ற பார்வையும் ஒரு நொடிப் பொழுதில் தந்து விடும்.
தேவையான பொருட்கள்:’
1 பழுத்த வாழைப்பழம்
1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்
பயன்படுத்தும் முறை:
வாழைப்பழம் ரொம்பவும் பழுத்திருக்க வேண்டாம். அளவில் பழுத்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள் தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும் 1/3 பங்கு யோகார்ட் இதனுடன் சேர்க்கவும் சாதாரணமான யோகார்ட்டை பயன்படுத்துங்கள். நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்
பயன்படுத்தும் முறை:
முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி கொள்ளுங்கள் இப்பொழுது தயாரித்த பேஸ் பேக் கலவையை முகத்தில் எல்லா இடங்களிலும் தடவுங்கள் கழுத்துப் பகுதியிலும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். கோடை காலமாக இருந்தால் ஒரு 15 நிமிடங்கள் அப்படியே இதை வைத்து இருங்கள். இதுவே குளிர் காலமாக இருந்தால் 20 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் பிறகு எப்பொழுதும் போல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ளுங்கள்
குறிப்பு:
இந்த பேஸ் பேக்கை 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கூட நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு பால் அழற்சி இருந்தால் யோகார்ட்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முழங்கையில் சிறிது அப்ளே செய்து பரிசோதனை செய்து கொண்டு அப்புறம் உபயோகிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பிறகு எந்த வித சரும வடுக்கள், அழற்சி போன்றவை ஏற்படவில்லை என்றால் நீங்கள் யோகார்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.