சிவா படத்தில் கௌரவ வேடத்தில் கீர்த்தி…

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘சீமராஜா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். இதை கீர்த்தி சுரேஷ் அதிகாரபூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் சிவகார்த்திகேயனோடு நடித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

.சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷும் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

‘சீமராஜா’ படம் செப்டம்பர் 13-ம் திகதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இமான் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.