எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காலை 5.00 மணி முதல் சீகிரியா மலைக்குன்றை பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது
சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சீகிரியாவை அண்மித்த பகுதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.