சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சென்ங் வங்கூவன் 21 உயர்மட்ட பிரதிநிதிகளுடன் மூன்று நாள் விஜயத்தில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர்.
இது தவிர இலங்கை சீனாவுக்கு இடையிலான பாதுகாப்பு வலயம் குறித்து இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.