சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து

சீனப் பிரதமர் லீ கொன் மற்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்ளல், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு, தொழில்நுட்பு புரிந்துணர்வு, சிறுநீரக நோய் பரிசோதனை செய்யும் நடமாடும் வாகனத் திட்டம், சீன அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான கூட்டுறவு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டடப் பணிகளை ஆரம்பித்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான விஞ்ஞான உறவுகளை மேம்படுத்தல் ஆகியன தொடர்பிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அபிவிருத்தி தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு உள்ளிட்டவர்கள் இலங்கையின் சார்பில் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.