சீனாவில் இலங்கையின் தேயிலையை பிரபல்யப்படுத்த தீர்மானம்…

சீனாவில் இலங்கையின் தேயிலையை பிரபல்யப்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சீனமக்கள் மத்தியில் இலங்கை தேயிலையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கை தேயிலையின் (ceylon Tea) தரத்தின் காரணமாக தேயிலை உற்பத்திக்கு உரிமை கோரும் சீனாவில் இலங்கை தேயிலைக்கு பெரும் வரவேற்பு உண்டு. சீன மக்கள் பசுமைத்தேயிலை (Green Tea) முதல் கறுப்பு தேயிலை (Black Tea ) பாவனையிலும் கூடுதலான ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன்காரணமாக இலங்கை பிளக் டீ யை சீனாவில் பிரபல்யப்படுத்துவதற்காக திட்டமொன்றை வகுப்பதன் அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபின்னர் இதற்கு பொருத்தமான நடவடிக்கையொன்றை தயாரிப்பதற்கும், சீனாவில் தேயிலை ஏலத்தினை நடாத்துவதற்குமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.