சீனாவின் வடமேற்கில் தஜிகிஸ்தான் நாட்டு எல்லையையொட்டிய பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளையொட்டி அமைந்துள்ள சீனாவின் மலையோர எல்லைப்பகுதியான அக்டோ பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.24 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எல்லைப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதம் அடைந்ததாகவும், ரெயில் தண்டவாளங்கள் இடம்பெயர்ந்ததாகவும், வீடு இடிந்த விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.