(FASTNEWS|COLOMBO) சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்டின் கேபிள் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன்போது, தொழிலாளர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்தது.
இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.