சீனாவில் இருந்து லண்டனுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனா, பல்வேறு நாடுகளுடன் வியாபார தொடர்பை அதிகரித்துக் கொள்ளும் விதமாக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ள யுவு நகரில் இருந்து லண்டன் நகருக்கு சரக்கு ரயில் செல்கிறது. கஜகஸ்தான், ரஷ்யா, பெலாராஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக 12 ஆயிரம் கி.மீ., துாரம் கடந்து பிரிட்டனின் லண்டன் நகரை அடைகிறது.
யுவி நகரில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள், கார்மென்ட்ஸ், துணி, பேக், சூட்கேஸ் ஆகிய பொருட்கள் இந்த ரயிலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள 15வது ஐரோப்பிய நகரம் லண்டன். 8வது ஐரோப்பிய நாடு பிரிட்டன்.
இதனால் சீனா – பிரிட்டன் இடையே வர்த்தகம் அதிகரிக்கும். ஐரோப்பா – ஆசியா – ஆப்ரிக்கா இடையே ரயில் சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என சீன ரயில்வே தெரிவித்துள்ளது.