(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் முக்கியமான மைய பிரச்சினைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என சீன நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, நேற்று, 13வது சுற்று இராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டபோது இந்த கருத்து பரிமாறப்பட்டது.
இந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாக மாற்றிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.