(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்க போர் விமானங்கள் சீனா மீது பறந்துள்ளன. ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளதாக பீக்கிங் பல்கலைக்கழக குழு (Peking University) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது, சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி சீன உளவு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் சமீபத்தில் தூதரக மூடல் மோதல்களும் இணைந்து உள்ளன.
சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், இது எதிர்வரும் மாதங்களில் ஒரு இராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் சீனா மீது பறந்துள்ளன, ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளன என பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு ஒன்று கூறி உள்ளது.
அமெரிக்காவின் பி -8 ஏ (போஸிடான்) நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் மற்றும் ஈபி -3 இ உளவு விமானம் தைவான் ஜலசந்தியில் நுழைந்தன, ஞாயிற்றுக்கிழமை ஜெஜியாங் மற்றும் புஜியான் கடற்கரைக்கு அருகே பறந்தன என தென் சீனக்கடல் மூலோபாய சூழ்நிலை ஆய்வின் பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.