சீனா வரவு செலவு திட்டத்தில் இராணுவ செலவீனம் அதிகரிப்பு…

இராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வரும் சீனா, இந்த ஆண்டு தனது இராணுவ பட்ஜெட்டை 175 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.

இராணுவத்திற்கு அதிக நிதி செலவு செய்து இராணுவத்தை நவீனப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.

புதிய நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் என தன் வலிமையை தொடர்ந்து அதிகரித்து வரும் சீனா, இதற்கான செலவினத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இராணுவத்திற்கு 150.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு தனது இராணுவ வரவு செலவு திட்டத்தை மேலும் 8.1 சதவீதம் உயர்த்தி உள்ளது. தேசிய மக்கள் காங்கிரசில் (தேசிய சபை) தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில், இராணுவத்துக்கு 175 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.