இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 10 ரூபா வரி விதிக்கப்பட்டாலும், சீனிக்கான சந்தையிலுள்ள சில்லறை விலை அதற்கு சமனாக அதிகரிக்கவில்லை என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நுகர்வோர் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இருப்பினும், சதொச விற்பனை நிலையங்களில் சீனி ஒரு கிலோ 102.00 ரூபா சில்லறை விலையில் விற்கப்படுவதாக நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.