சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

பெலவத்தை மற்றும் செவனகலை சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிராக, இன்று(22) எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தற்போது அரசாங்க நிறுவனங்களாக உள்ள இவை இரண்டும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும், பாரிய ஊழியப் படையைக் கொண்ட நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், நாட்டின் சீனி தொழிற்துறையை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்ய ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த போராட்டமானது இன்று(22) மொனராகலையில் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa