சீன அதிபராக ஜி ஜின்பிங் 2-வது தடவையாக இன்று பதவி ஏற்றார்…

சீன அதிபராக ஜி ஜின்பிங் இன்று(25) இரண்டாவது தடவையாக பதவி ஏற்றுள்ளார். அவருடன் பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட் பீரோ கமிட்டியும் பொறுப்பு ஏற்றுள்ளது.

சீன அதிபராக ஜி ஜின்பிங். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி பதவி ஏற்ற இவர் சீன மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக திகழ்கிறார். இந்நிலையில் அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஜி ஜின்பிங்கின் பெயரையும், சித்தாந்தமும், சேர்க்கப்பட்டது. சீன கம்யூனிஸ்டு மாநாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று அவர் 2-வது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்றார். அவருடன் பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட்பீரோ கமிட்டியும் பொறுப்பு ஏற்றது.