(FASTNEWS|COLOMBO) – கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர், அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது இதுவே முதல் முறை.
இந்த சந்திப்பின்போது, இரு தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் தொடர்ந்து அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டது. சீன வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இரு தரப்பு உறவை புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியதின் தேவையை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்.
இதேவேளை, இந்தியாவில் நடைபெற இருக்கும் முறை சாரா உச்சி மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஜின்பிங்கும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர தயாராக இருப்பதை உறுதி செய்தார்