சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை(23) மேற்கொள்ளவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் பயணிக்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மஹிந்த சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.