சீன அரசுக்கு சொந்தமான சீன வங்கியின் கிளை இலங்கையில்..

சீன அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய நிதி நிறுவனமான சீன வங்கி, அதன் கிளையை இலங்கையில் நிறுவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் சீன வங்கி தனது கிளையை தலைநகர் கொழும்பில் நிறுவவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் முதலீட்டு மற்றும் வர்த்தக துறையில் சீனாவின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதோடு, சீனாவின் நிதிப் பங்களிப்பில் பல திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவற்றின் பணக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் வகையில் இவ் வங்கி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 
(rizmira)