சீனாவின் நணிங்கில் இடம்பெற்ற சீன-ஆசிய எக்ஸ்போ13 (CAEXPO13) கண்காட்சியானது சீன, ஆசிய நாடுகளின் 15 தலைவர்கள் பங்கேற்ற நிலையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
அதில், சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்றிருந்தது.
தென்னாசியாவின் ஒரேயொரு விருந்தினராகவும், சீன-ஆசிய எக்ஸ்போ ஆரம்பித்ததிலிருந்து உலகத்திலேயே மூன்றாவது சிறப்பு விருந்தினர் நாடாகவும் இலங்கை அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டமை மிகவும் சிறப்பம்சமாகும். இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் றிசாத், குவாங்ஷோ மாகாணத்தின் தலைநகரான, நண்ணிங்கின் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான கண்காட்சியில் உறையாற்றினார்.
இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியின் போது இலங்கை சார்பில் பங்கேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
2015 – 2016 சுட்டெண்ணின் படி உலகலளாவிய போட்டிச்சந்தையில் இலங்கை 68வது இடத்தை வகிக்கின்றது. மேலும், இதனை முன்னேற்ற எங்கள் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை விரிவாக்க இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகின்றது. குறிப்பாக கிழக்கு, மேற்கு பிரதேசங்கள், கடல் மற்றும் ஆகாய போக்குவரத்துக்கு உகந்ததாக அமைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
ஏற்கனவே எமது நாடு சதந்நிர வர்த்தக உடன்படிக்கைகளை இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் மேற்கொன்டுவருகின்றது. உற்பத்தியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இதன் மூலம் பிரதான வர்த்தகப் பாதையொன்றுக்கு வழிவகுத்துள்ளோம். மேலும், சீனாவும், ஆசிய முதலீட்டளர்களும் இதுபோன்ற பிரதான உடன்படிக்கைகளை, இலங்கையுடன் மேற்கொள்வதனூடாக, புதிய முதலீட்டாளர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும், சீன வர்த்தக நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு நாம் அழைப்புவிடுப்பதோடு, அதன்மூலம் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுமெனவும் மேலும் தெரிவித்திருந்தார்.