சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – கொள்ளுப்பிடிய பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று(30) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போலி கடன் அட்டைகளை அச்சிடும் விற்பனையில் ஈடுபட்ட 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடன் அட்டைகள் தயாரிக்கும் இயந்திரம், 5 வெற்று கடன் அட்டைகள் மற்றும் மடிக்கணினி என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.