சீமராஜா படத்தை வெளியிட தடை…

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன் என படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா கூறியுள்ளார். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்கள் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.