சீமெந்து பக்கற்றை பற்­களினால் கடித்துப் பிடித்­த­வாறு 5 நிமி­டங்கள் நின்ற இளைஞர்

50 கிலோ எடை கொண்ட சீமெந்து பக்கெற் ஒன்றை தனது பற்­களினால் கடித்துப் பிடித்­த­வாறு 5 நிமி­டங்கள் நிமிர்ந்து நின்று இளைஞர் ஒருவர் சாதனை படைத்­துள்ளார்.

புத்­தளம் இங்­கி­னி­மி­டிய பிர­தே­சத்தில் மக்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வித கட்ட­ணங்­களும் அற­வி­டாமல் இச்­ சா­க­சங்­களை நிகழ்த்திக் காட்­டி­யுள்ளார் ஆர்.பீ.டி.பிரசாத் குமார சிறி­வர்­தன என்ற இளைஞர்.

தனது சிறு­வ­ய­தி­லி­ருந்தே சென்டோ என்ற கண்­காட்சி கலையில் தேர்ச்சி பெற்­றுள்ள இவர், 50 கிலோ­கிராம் சீமெந்து பைக்­கற்­றினை எந்­த­வொரு ஆதா­ரமும் இன்றி தனது பற்­க­ளினால் கடித்து தூக்­கி­ய­வாறு சுமார் 5 நிமி­டங்கள் அப்­ப­டியே வைத்­தி­ருக்கும் இய­லு­மையை கொண்­டுள்ளார்.

அத்­துடன், மோட்டார் சைக்­கிளை மணிக்கு 60 கிலோ­மீற்றர் வேகத்தில் செலுத்­தி­ய­வாறு 35 கிலோ­மீற்றர் வரை இரு கைகளையும் கைப்­பி­டி­யி­லி­ருந்து எடுத்­த­வாறு செலுத்துவதுடன் கொடிய விஷப்­பாம்­பு­க­ளையும் சாதா­ர­ண­மாக  பிடிக்கும் அசாத்­திய திற­மை­யையும் கொண்­டுள்ளார்.

உழவு இயந்­தி­ரத்­தினை தனது வயிற்றின் மேலாக செலுத்த விடுதல் மற்றும் எவ்­வ­ளவு ஓடு­களையும் தனது உடலில் அடித்து உடைத்­தாலும் தாங்கிக் கொள்ளும் அள­வுக்கு தனது உடலில் வலிமை காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார்.

தன்னால் காண்­பிக்­கப்­படும் இத்­த­கைய அபா­ய­க­ர­மான செயல்­களை யாரும் செய்து பார்ப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்டாம் என சிறி­வர்­தன அறி­வுரை வழங்கியுள்ளார்.

அத்துடன், தன்னை போன்று திறமையுள்ளவர்களை உலகறிய செய்வதற்கு உரிய தரப்பினர்களிடம் உதவியும் கோரியுள்ளார்.

15977prasad-01