சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான சிறப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி. அபேகோன் தலைமையில் நடைபெற்றது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு மேலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.