சீரற்ற காலநிலையால் மத்தலயில் விமானங்கள் தரையிறக்கம்…

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த இரண்டு விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் மற்றைய விமான சேவைகளில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.