நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 137 தொகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27,064 குடும்பங்களைச் சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 11ஆயிரம் 31 குடும்பங்களைச் செர்ந்த 41 ஆயிரத்து 779 பேர் 224 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.