மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், தம்புள்ளை மொத்த விற்பனை மரக்கறி சந்தைக்கு மரக்கறி வகைகள் விநியோகம் செய்வதும் குறைந்துள்ளது.
இதனால் மரக்கறி வகைகளின் விலை சுமார் 40% உயர்வடைந்துள்ளது.
மலைநாட்டு மரக்கறி வகைகள் 40% உம் , தாழ் நிலப்பகுதி மரக்கறி வகைகள் 20% உம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சில மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை வருமாறு,
1Kg போஞ்சி 140/= ,1Kg கத்தரிக்காய் 140/=,1Kg பச்சை மிளகாய் 400/=, 1Kg கறி மிளகாய் 240/=, 1Kg தக்காளி 70/=,1Kgகோவா 110/=,1Kg கரட் 270/= என்ற அடிப்படையில் தம்புள்ள மரக்கறி சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறி வகைகளை சந்தைக்கு விநியோகம் செய்வதிலும் பயிர்ச் செய்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.