சீரற்ற காலநிலை – ஆஸி’யும் உதவிக்கரம் நீட்டுகிறது

இலங்கையில் காலநிலையின் சீற்றத்தால் தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்காக நிவாரணங்களை வழங்க தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜூலி பிஷப் கருத்து தெரிவிக்கையில்:

நாட்டில் தற்போது நிலவுகின்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை என்ன எதிர்பார்க்கின்றதோ, அதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இலங்கை, அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நண்பனென தாம் கருதுவதாகவும் அனர்த்தங்களின் போது வீடிழந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்குத் தேவையான நிவாரணங்களை தாம் பெற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.