சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 36 ஆயிரத்து 594 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில்; 3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 424 பேர் 32 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் வடக்கில் 143 வீடுகள் முழுமையாகவும், 3 ஆயிரத்து 291 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் குறிப்பிட்டுள்ளது.