சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் எண்ணாயிரம் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்காக சுமார் 08 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.

இதுவரையில் 3,238 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.