நாட்டின் நிலவுகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாச்சதுவ, இராஜாங்கனை, மவ்ஆர, தியவெவ மற்றும் வெஹரகல நீர்த் தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் தெதுரு – ஓயா, நாலந்த, தப்போவ, மெடியாவ, மாகல்ல தம்பராவ மற்றும் அம்பேவல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.