மாலைதீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த கப்பல் ஒன்று புயலில் சிக்கி சேதமடைந்து, காலி துறைமுகத்திற்கு அருகில் வந்துள்ளது.
சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, தமது கப்பலை காலி துறைமுகத்திற்குள் அனுமதிக்காமல் இருப்பதாக கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து மாலைதீவு நோக்கி வந்த இந்த கப்பல் மெங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் 7 பேர் பணியாற்றுவதுடன் அவர்களை அனைவரும் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் கப்பல் ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.