வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒவ்வொரு முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும், குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.