சீரான சரும நிறத்தை பெற எலுமிச்சை சாறு மாஸ்க்…

எலுமிச்சை சாறை பல வழிகளில் பயன்படுத்தி, சரும நிறத்தை பேணிக் காக்கலாம். சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெற, இயற்கை ப்ளீச் எலுமிச்சையை பல காலங்களாக பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை , சரும நிரமிழப்பு, சரும சேதம் போன்றவற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இந்த இயற்கை பொருளை பல விதங்களில் பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம்.

இயற்கை பொருளை பல விதங்களில் பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம். பொதுவாக, விரைந்து செயல்பட, எலுமிச்சை சாறை , இதனோடு ஒத்த மற்ற பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

சருமத்தின் எல்லா பகுதியிலும் சீரான நிறத்தை பெற, எலுமிச்சை சாறை கொண்டு மாஸ்க் போல் செய்து பயன்படுத்தலாம். எளிதாக செய்யக்கூடிய , விலை குறைவான அதே சமயம் நல்ல பலனை விரைவில் தரக் கூடிய இந்த வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

1 : தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது : மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஓன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக் கழுவி , சிறிது ஈரபதத்துடன் வைத்துக் கொள்ளவும். இப்போது முகத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின்பு சிறிதளவு மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும்.

2. தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பவுடர் – 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது : மேலே கூறிய எல்லா மூல பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின் மென்மையான ஸ்கின் டோனர் பயன்படுத்தவும். இது ஒரு சிறந்த பலனை தரும்.

3.தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1/2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது : ஒரு கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை நன்றாக கழுவிய முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

4. தேவையான பொருட்கள் :
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
பப்பாளி விழுது – 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது : பப்பாளி விழுதுடன் , எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் எல்லா இடத்திலும் சீராக தடவவும். 10 நிமிடம் கழித்து , க்ளென்சர் மற்றும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின்பு முகத்தை துடைத்து, மென்மையான மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும்.