சீ.எஸ்.என். அலைவரிசையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இவ் அலைவரிசையின் பணிப்பாளராகவும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் கடமையாற்றிய காடியா கருணாஜீவ என்ற பெண் சந்தேக நபரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கடுவெல நீதிமன்றிடம் கோரியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காடியா கருணாஜீவ தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதால், இன்டர்போலின் உதவியுடன் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது . மற்றும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இதற்கு முன்னர் அவரது சட்டத்தரணிகள் அறிவித்திருந்தனர். எனினும் இதுவரையில் காடியா கருணாஜீவ நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
பிடிவிராந்து உத்தரவு பிறப்பிப்பது குறித்து எதிர்வரும் 10ம் திகதி தீர்மானிக்கப்படும் என கடுவெல நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.