வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“வடமாகாண முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை மீண்டும் நியமிக்க எதிர்பார்த்து இல்லை. ஏனெனில், கடந்த முறை முதலமைச்சர் பதவியினை அவருக்கு வழங்கும் போது அவர், தான் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தான் குறித்த பதவியில் இருப்பேன் என தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அவரை பதவியில் நியமிப்பது நன்றன்று என நாம் நினைக்கின்றோம்”
Rishma