சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – GMOA

கடந்து சென்ற மூன்று வருட காலத்திலும் சுகாதார துறையில் இடம்பெற்றுள்ள ஊழல் கொடுக்கல் வாங்கல் மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவி, விசாரிக்கப்படுவது முக்கியமான காரணமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.

குறித்த முறைகேடுகள் மற்றும் ஊழல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தமது சங்கமானது தற்போது தகவல்களை பெற்று வருகின்றதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

இவ்வருடம், மே 28ம் திகதி இடம்பெற்ற மருந்துகள் கொள்வனவு செய்யும் போது ஒரு டென்டருக்கு மட்டும் சுமார் 700 இலட்சம் ரூபா அரசுக்கு கிடைக்காது போயுள்ளதாகவும், குறித்த பணமானது யாருடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் நேற்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.