சுகாதார அமைச்சருடனான பிரச்சினையினை மறப்போம் – GMOA

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உடன் முரண்பாடுகள் இருப்பினும், வடக்கின் வெள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மலசலகூட கழிவு நீர் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது சுகாதார நடவடிக்கைகளை பேணும் வகையில் வைத்தியர்கள் தன்னார்வமாக சேவை செய்து வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

அது தவிர, பரவும் நோய்கள் இல்லாத நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இன்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.