சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியினை குறித்த அமைச்சின் ஊடகப்பிரிவு உறுதி செய்துள்ளது.

குறித்த ஊடக செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

இது தொடர்பில் கவனம் செலுத்த விசேட குழுவொன்று தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலுக்கு உள்ளான சுகாதார அமைச்சின் இணையத்தளமானது தற்போது செயலிழந்துள்ள நிலையில்,குறித்த இணையத்தளத்தினுள் பிரவேசிக்க முடியாது என்பதனைத் தெரிவிக்க திரையில் விசேட செய்தியொன்று திரையிடப்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் எம்.சி.ஏ எனும் பெயரில் இலச்சினை ஒன்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹெக் செய்திருப்பவர் Z என (hacked by mr z) குறிப்பிடப்படுகின்றது.

15909733_10211818105834411_2002799176_n