சுகாதார சேவை பயிற்சிகளுக்கு இணையத்தினூடக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

சுகாதார சேவையின் சில பயிற்சிகளுக்கு இணையத்தளமூடாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.