தமது பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை வலியுறுத்தி ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் செயலாளர் தர்மகீர்த்தி எப்பா தெரிவிக்கையில்;
“..எமது தொழிற்சங்க கூட்டமைப்பு பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தை வலியுறுத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
எமது இந்த குறைபாடுகளுக்கு அதிகாரிகள் தகுந்த தீர்வை வழங்காவிடின் நாம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்..” என அவர் மேலும் தெரிவித்தார்.
-Rishma