நாடு முழுவதிலும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார இரசாயன நிபுணர்கள் மற்றும் நுளம்பு குடம்பி நுட்பவியலாளர்கள் போன்ற 3500 பேர் வரையில் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதனை மற்றும் நுளம்பு குடம்பி தொழில்நுட்ப டிப்ளோமாவின் கீழ் வருகின்ற தொழில்நுட்ப விடயங்களை, பொது சுகாதார உதவி அதிகாரிகளுக்கான பாடத்திட்டத்தில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இதனால் டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சையளிப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.