சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே பெரும் அதிர்ச்சி அலையில் மூழ்கியுள்ளது எனலாம். அடுத்து எந்த நடிகரின் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு நேற்று(05) மூடப்பட்டுள்ளது.
பல நடிகர்கள் சுசித்ராவின் வலையில் சிக்கினாலும் தனுஷின் இமேஜ்தான் அதில் அதிகம் டேமேஜ் ஆனது. எனவே சிம்பு சொல்லித்தான் சுசித்ரா இப்படி செய்கிறார் என இணையத்தில் ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.
இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சுசி லீக்ஸ் தொடர்பாக தனுஷிடம் பேசினேன். அவர் ரஜினிகாந்த் போன்று சிரித்துவிட்டு இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட், வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.
மேலும் சுசித்ரா, “சிம்பு ரொம்ப நல்லவர். அவர் என் உண்மையான சகோதரர்” என கூறியிறுப்பதால் அவர்தான் சுசித்ராவை தூண்டியிருப்பார் என ரசிகர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் சிம்பு விஷயத்தில் கதையே வேறு.
சுசித்ரா சிம்புவை பற்றி ஒருவார்த்தை பேசி இருந்தாலும் இந்நேரம் சிம்பு பிரஸ்மீட் வைத்து தைரியமாக பதில் சொல்லியிருப்பார். தன் மீதுள்ள களங்கத்தை உடனே துடைத்திருப்பார். அதுதான் சிம்பு ஸ்டைல் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்…..