டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடம் மூன்று சந்தர்ப்பங்களில் 30 லட்சம் ரூபாய்க்கான 3 காசோலைகளை கடந்த 2015ம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2015 ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஆகஸ்ட் 17ம் திகதி குறித்த காசோலை மூன்றும் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற முன்னிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதில் ஒரு காசோலை 2015.08.24 ஆம் திகதியும், மற்றுமொரு காசோலை 2016.03.31 திகதியும் பிறிதோர் காசோலை 2015.11.12 ஆம் திகதியும் வெளியிடப்பட்டுள்ளது.