(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் ஒருபோதும் ஐ.தே.கவின் ஒழுக்க விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படவில்லை என கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடிவெடுத்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கபீர் ஹஷிம் இதனை கூறியதோடு, கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவ்வப்போது பொதுச்செயலாளரிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவது வழக்கம் என்றும் கூறினார்.