சுதந்திரக்கட்சி – பொதுஜன முன்னணி இணைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகள் இரண்டும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் வைத்து இரு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.