எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை அதிகாரம் கிடைக்கப் பெறாத ஆசனங்களில் அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்ள தேவை ஏற்படின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கட்டாயமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதாக விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று(27) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’வின் கீழ் மொட்டு இருப்பது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் காரணமாகவே ஆதலால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய எந்தவித தேவையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இரண்டு முகாம்களாக இருந்தாலும் நாங்கள் ஒன்று தான். அதிகாரத்தினை பெற்றுக் கொள்வதில் மொட்டுடன் இணைவது பற்றி இரு கருத்துக்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
#G-reeshma..