ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.
இன்று இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரங்கள், வரவு செலவு திட்டம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது பேசப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.